ஃபஹத் ஃபாசிலின் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்': அக்டோபர் 2 ரிலீசுக்கு தயாராகும் ஃபேண்டஸி பயணம்!
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் சிறப்பு போஸ்டரை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. பாகுபலி படங்களைத் தயாரித்த புகழ்பெற்ற ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்துடன் எஸ்.எஸ்.கார்த்திகேயா இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். சஷாங்க் யெலேட்டி இயக்கும் இந்த ஃபேண்டஸி திரைப்படத்தில் சாரா பாலேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கால பைரவா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒரு சாதாரண கார் பயணம் மாயாஜாலமும் சாகசங்களும் நிறைந்த ஒன்றாக மாறும் விசித்திரமான கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ஃபஹத் ஃபாசிலின் மாறுபட்ட நடிப்பு, புதுமையான திரைக்கதை மற்றும் ஆர்கா மீடியா நிறுவனத்தின் உயர்தர தயாரிப்பு தரம் காரணமாக, அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரும் இப்படம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
· Propratheesh