போலியான மாயாஜாலக்காரன் மற்றும் மாய சக்தி கொண்ட சிறுமி: ஃபகத் பாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்!

போலியான மாயாஜாலக்காரன் மற்றும் மாய சக்தி கொண்ட சிறுமி: ஃபகத் பாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள வினோதமான பேண்டஸி திரைப்படமான 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' வரும் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குநர் ஷஷாங்க் எலேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஒரு போலி மாயாஜாலக்காரனாக ஃபகத் பாசிலும், விசேஷ சக்திகள் கொண்ட ஒரு சிறுமியாக சாரா பாலேக்கரும் இணைந்து சுவாரசியமான சாகசப் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். ஃபகத் பாசிலின் நகைச்சுவை கலந்த தனித்துவமான நடிப்பு இப்படத்தில் ரசிகர்களுக்கு புதுவித விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரும் இத்திரைப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்க ஏற்ற வண்ணமயமான படைப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

· Only Kollywood

பழைய செய்திகள்