திரையரங்குகளில் நாளை ஃபகத் பாசிலின் டான்ட் ட்ரபுள் தி ட்ரபுள்: டிக்கெட் முன்பதிவு தீவிரம்!

திரையரங்குகளில் நாளை ஃபகத் பாசிலின் டான்ட் ட்ரபுள் தி ட்ரபுள்: டிக்கெட் முன்பதிவு தீவிரம்!

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don't Trouble The Trouble). நாளை அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு முழு வீச்சில் தொடங்கியுள்ளது. பாஹுபலி படங்களைத் தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஷஷாங்க் ஏலேட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார். ஃபகத் பாசிலுடன் சாரா பலேகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேஜிக், காமெடி மற்றும் சாகசம் நிறைந்த ஃபேன்டஸி களமாக இப்படம் அமைந்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நாளைய முதல் காட்சியைப் பார்க்க சினிமா விரும்பிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்