ஃபஹத் பாசிலின் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': அக்டோபர் 2 திரையரங்குகளில் ரிலீஸ்

ஃபஹத் பாசிலின் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்': அக்டோபர் 2 திரையரங்குகளில் ரிலீஸ்

முன்னணி நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள விசித்திரமான நகைச்சுவை குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம் 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்'. பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை உலகளவில் உருவாக்கிய அர்கா மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. சாஷாங் யெலட்டி இயக்கியுள்ள இப்படத்தில் சூரி மற்றும் திவ்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து மாயாஜால கலாட்டாவை திரையில் நிகழ்த்தியுள்ளனர். இளம் இசையமைப்பாளர் காலபைரவா இப்படத்திற்கு உற்சாகமூட்டும் பாடல்களை இசையமைத்துள்ளார். ஃபஹத் பாசிலின் வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை திருப்பங்கள் இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கலகலப்பான நகைச்சுவை விருந்தாக திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட டீசர் விரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

· Propratheesh

பழைய செய்திகள்