துள்ளலான இசையில் வெளியானது 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' தலைப்புப் பாடல்
ஃபஹத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' திரைப்படத்தின் அதிரடியான தலைப்புப் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் காலபைரவா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்கா மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பாடலில் ஃபஹத் பாசிலின் அலட்டலில்லாத சுட்டித்தனமான உடல்மொழியும், வசீகரமான துள்ளல் நடனமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. லஹரி மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியான இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி பண்டிகையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. படத்தின் பாடலும் சுவாரசியமான காட்சிகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
· Actor Kayal Devaraj