நெட்பிளிக்ஸ் ட்ரெண்டிங்கில் 2-வது இடத்தைப் பிடித்து கலக்கும் ஃபஹத் ஃபாசிலின் 'DTTT'!

நெட்பிளிக்ஸ் ட்ரெண்டிங்கில் 2-வது இடத்தைப் பிடித்து கலக்கும் ஃபஹத் ஃபாசிலின் 'DTTT'!

மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான 'டோண்ட் ட்ரபுள் தி ட்ரபுள்' (Don't Trouble The Trouble) திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இந்திய அளவில் 2-வது இடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அர்கா மீடியா வொர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. சஷாங்க் யெலேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த நகைச்சுவை கலந்த ஃபேன்டஸி திரைப்படத்தில் சாரா பாலேகர், ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து நடித்துள்ளார். கால பைரவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஓடிடி பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஃபஹத்தின் சுவாரசியமான நடிப்பு ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் கிடைக்கும் இப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் ஃபஹத்தின் நகைச்சுவை காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்