'ஃபேமிலி பாய்' படத்தின் முதல் பாடல் 'தீராகணமே' வெளியானது: டிசம்பர் 11 அன்று படம் ரிலீஸ்

'ஃபேமிலி பாய்' படத்தின் முதல் பாடல் 'தீராகணமே' வெளியானது: டிசம்பர் 11 அன்று படம் ரிலீஸ்

நடிகர் சரண் மற்றும் அனுக்ரஹா எஸ் நம்பியார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஃபேமிலி பாய்' திரைப்படத்தின் முதல் பாடலான 'தீராகணமே' இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. மிதுன் மாணிக் வரிகளில், நிர்மல் இசையமைத்துள்ள இந்த ஆன்மார்த்தமான மெலடிப் பாடலை ஆதித்யா ஆர்.கே மற்றும் மால்வி சுந்தரேசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். அணுவும் அண்டமும் அவளும் யானும் அனைத்தும் காதலே என்ற அழகான வரிகளுடன் காதலின் ஆழத்தைப் பேசும் விதமாக உருவாகியுள்ள இந்தப் பாடல் இசைப்பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மெக்கானிக் பிக்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் தயாரிப்பில், பலூன் பிக்சர்ஸ் வெளியீடாக உருவாகும் இப்படம் வரும் டிசம்பர் 11 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. குடும்ப உறவுகளையும் காதலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்