வாழ்க்கைப் போராட்டத்தை வென்ற இளைஞன்: சரண் நடிக்கும் 'ஃபேமிலி பாய்' டீசர் வெளியீடு!
"அவன் இழந்தான், வீழ்ந்தான், போராடினான், வாழ்வின் அர்த்தம் அறிந்து வென்றான்" என்ற உணர்ச்சிமிக்க வாழ்க்கை வரிகளுடன் இயக்குநர் மிதுன் மாணிக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இணையத்தில் இத்தீசர் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் சரண் மற்றும் அனுக்ரஹா எஸ் நம்பியார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு எம்.சுகுமார் நேர்த்தியான ஒளிப்பதிவு செய்துள்ளார், நிர்மல் ஜே.பி இசையமைத்துள்ளார். அன்றாட நடுத்தரக் குடும்பத்து இளைஞன் வாழ்க்கையில் சந்திக்கும் அடுத்தடுத்த சோதனைகளையும், அதிலிருந்து மீண்டு வந்து வெற்றியை அடையும் உத்வேகத்தையும் டீசர் நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளது. காட்சிகளில் தென்படும் உணர்ச்சித் ததும்பல் படத்திற்கான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. மெக்கானிக் பிக்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் பலூன் பிக்சர்ஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 11, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. டீசருக்குக் கிடைத்துள்ள நல்ல வரவேற்பைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
· Only Kollywood