இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மாஸ்டர் பிளான் பேண்டஸி திரைப்படம்: தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மாஸ்டர் பிளான் பேண்டஸி திரைப்படம்: தீபாவளி ஸ்பெஷல் போஸ்டர்

எஸ். ஹரி உத்ரா எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர் பிளான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் தீபாவளி போஸ்டரை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பேண்டஸி பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இதில் தருண் விஜய், அக்ஷரா ரெட்டி, பாவெல் நவகீதன், மனோ செல்வா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். யானையை மையப்படுத்திய சுவாரசியமான கற்பனைப் பின்னணியில் அமைந்த இந்த போஸ்டர் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததும் கிராபிக்ஸ் மற்றும் பின்னணி வேலைகள் தொடங்கப்பட உள்ளன. புதுமையான கதையம்சத்துடன் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்