ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி இணையும் 'ஃபீல் மை லவ்': டிசம்பரில் உலகமெங்கும் ரிலீஸ்!
இளம் தலைமுறையினரைக் கவரும் ஃபீல் குட் காதல் திரைப்படமாக உருவாகியுள்ள 'ஃபீல் மை லவ்' (Feel My Love) திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ஹரி பிரகாஷ் இயக்கத்தில் எஸ்.எல்.ஜே கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் '96' புகழ் ஆதித்யா பாஸ்கர், ராஜ் அய்யப்பா, ஐரா, அம்மு அபிராமி, பிரியா திம்மேஷ் மற்றும் மூத்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தசரா வாழ்த்துகளுடன் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய போஸ்டர் ரொமான்டிக் சினிமா பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
· Actor Kayal Devaraj