அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் ராக்கா திரைப்படத்தில் இணைந்த பெமினா ஜார்ஜ்

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் ராக்கா திரைப்படத்தில் இணைந்த பெமினா ஜார்ஜ்

ஜவான் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படமான 'ராக்கா' (Raaka) திரைப்படத்தில் மலையாள நடிகை பெமினா ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'மின்னல் முரளி' படத்தின் மூலம் கவனம் பெற்ற பெமினா ஜார்ஜ் இது குறித்துப் பேசுகையில்: "ராக்கா போன்ற ஒரு பிரம்மாண்ட படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த அற்புதமான பயணத்தில் இணைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அட்லீயின் மாஸ் மேக்கிங்கும் அல்லு அர்ஜுனின் எனர்ஜியும் இணையும் இப்படம் பான்-இந்தியா அளவில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பெமினா ஜார்ஜ் போன்ற இளம் திறமையாளர்கள் இப்படத்தில் இணைந்திருப்பது படத்திற்கான சுவாரசியத்தைக் கூட்டியுள்ளது. இப்படத்தின் கூடுதல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்