லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் மைத்ரி இணையும் RX: ரெஜினா நடிக்கும் புதிய படம்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் (G Squad) ஆகிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX என்று பெயரிடப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கான போராட்டம் பல நேரங்களில் தனிமையானது என்ற வலிமையான வாசகத்துடன் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ரெஜினா கெசண்ட்ரா, நாசர் மற்றும் திலக் ரமேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மருத்துவ பின்னணி மற்றும் உண்மை சம்பவங்களின் தாக்கத்தை மையமாகக் கொண்டு இக்கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. வித்தியாசமான மற்றும் தீவிரமான கதைகளை ஆதரிக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் முழுமையான நடிகர் பட்டாளம் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar