'அவராச்சன் அண்ட் சன்ஸ்': ஜெய்மோனாக களமிறங்கும் கணபதி, அக்டோபர் 2 ரிலீஸ்!
மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மேஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அவராச்சன் அண்ட் சன்ஸ்' (Avaraachan & Sons) படத்தின் புதிய கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் 'ஜெய்மோன்' என்ற நகைச்சுவை கலந்த முக்கிய பாத்திரத்தில் நடிகர் கணபதி நடிக்கிறார் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தம்பி இயக்கத்தில், ஜோசப் விஜீஷ் மற்றும் தம்பி இணைந்து எழுதியுள்ள இந்தத் திரைப்படம் ஒரு முழுநீள குடும்பக் கொண்டாட்டக் கதையாக உருவாகியுள்ளது. பிஜு மேனன், ஸ்ரீநாத் பாஸி, வினய் போர்ட், ஜானி ஆண்டனி, கிரேஸ் ஆண்டனி என மலையாளத்தின் முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடிக்கின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கணபதி நடிக்கும் புதிய நகைச்சுவைக் கதாபாத்திரம் என்பதால் ரசிகர்களிடையே தனி ஆர்வம் எழுந்துள்ளது. லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 2 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
· Apifilms