இரண்டாம் நாளிலும் பட்டையைக் கிளப்பும் காரி விடி லட்சுமி: விறுவிறுப்பான புக்கிங் நிலவரம்!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் 'காரி விடி லட்சுமி' திரைப்படம் தனது இரண்டாவது நாளிலும் வலுவான வசூல் வேட்டையைத் தொடர்ந்துள்ளது. புக்மைஷோ தளத்தில் கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 1,140க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். முதல் நாளில் படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும் மௌத் டாக் எனப்படும் ரசிகர்களின் வாய்வழி பாராட்டும் இரண்டாம் நாளின் முன்பதிவை ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளது. குறிப்பாக குடும்ப ரசிகர்களின் வருகை திரையரங்குகளில் அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களில் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருவதால், காரி விடி லட்சுமி படத்தின் வசூல் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என திரையுலக வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
· Ursvamsishekar