கரிவிடி லட்சுமி சிறப்பு பிரீமியர் காட்சிக்கு ஏகோபித்த வரவேற்பு: அக்டோபர் 17 திரைக்கு வருகிறது!

கரிவிடி லட்சுமி சிறப்பு பிரீமியர் காட்சிக்கு ஏகோபித்த வரவேற்பு: அக்டோபர் 17 திரைக்கு வருகிறது!

கிராமத்துப் பின்னணியில் கலகலப்பான நகைச்சுவை மற்றும் குடும்பப் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கரிவிடி லட்சுமி (Garividi Lakshmi) திரைப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு பிரீமியர் காட்சி திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தகவலை சினிமா மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் பகிர்ந்துள்ளார். படத்தைப் பார்த்த திரையுலகப் பிரபலங்கள் மற்றும் முன்னணி விமர்சகர்கள், படத்தின் எதார்த்தமான நகைச்சுவைக் காட்சிகளையும் மனதைத் தொடும் உணர்ச்சிகரமான தருணங்களையும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். திரையரங்குகளில் கொண்டாட்டம் நிச்சயம் என்று பார்த்தவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்து வருவது படக்குழுவினருக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பிரீமியர் காட்சிக்கு கிடைத்துள்ள சிறப்பான பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக, பொதுமக்களுக்கான முன்பதிவு வேகமெடுத்து வருவதாக விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். குடும்பங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து மகிழும் திரைப்படமாக கரிவிடி லட்சுமி திகழும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· Ursvamsishekar

பழைய செய்திகள்