கரிவிடி லட்சுமி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: அக்டோபர் 17 ரிலீஸ்!

கரிவிடி லட்சுமி திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது: அக்டோபர் 17 ரிலீஸ்!

தெலுங்கு சினிமாவில் கிராமத்துப் பின்னணியில் மண்வாசனை மாறாமல் உருவாகியுள்ள கரிவிடி லட்சுமி (Garividi Lakshmi) திரைப்படத்திற்கான திரையரங்க டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இப்படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பு தரப்பு மற்றும் பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஆந்திராவின் பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவமான புர்ரகதாவை மையமாகக் கொண்டு நகைச்சுவை, எமோஷன் மற்றும் குடும்பப் பின்னணியுடன் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்துப் பெண்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் சுவாரசியமாக விவரிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. புதிய முகங்களின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்திற்கு, டிக்கெட் முன்பதிவு தற்போது இணையதளங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரையரங்குகளில் குடும்பத்துடன் சென்று ரசிக்கக்கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக இது அமையும் என்று சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்