கிராமியப் பாடகியின் இதயத்தை உருக்கும் பயணம்: 'கரிவிடி லட்சுமி' படத்தின் டிரெய்லர் வெளியானது
கிராமப்புற பாடகியின் வாழ்க்கைப் போராட்டத்தையும் அவரது பாடல் உலக அளவில் அடையாளம் பெறும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கரிவிடி லட்சுமி' (Garividi Lakshmi) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எளிய பின்னணியில் பிறந்து தனது அபார குரல் வளத்தால் சமூகத் தடைகளை உடைத்து முன்னேறும் ஒரு பெண்ணின் வெற்றிப் பயணத்தை மிக யதார்த்தமான காட்சிகளுடன் இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள மண் வாசனை நிறைந்த நாட்டுப்புறப் பாடல்களும் நடிகர்களின் உணர்ச்சிகரமான நடிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படம், நல்ல கதையம்சம் கொண்ட யதார்த்த திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத உணர்வுப்பூர்வ திரை அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
· Ursvamsishekar