இன்னும் 7 நாட்களில் திரைக்கு வரும் 'கரிவிடி லட்சுமி': உணர்ச்சிகரமான வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்!
கிராமப்புற நாட்டுப்புறக் கலை மற்றும் உணர்வுப்பூர்வமான வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'கரிவிடி லட்சுமி' திரைப்படம் வரும் அக்டோபர் 17 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இன்னும் 7 நாட்களில் படம் வெளிவரவுள்ளதை நினைவூட்டும் புதிய வீடியோ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. கரிவிடி லட்சுமியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படம், எமோஷனல் காட்சிகளாலும் மனதை உருக்கும் பாடல்களாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றன. கலாச்சாரமும் மனித வாழ்வின் வலியும் பேசும் இதுபோன்ற யதார்த்தமான திரைப்படங்களுக்கு தற்காலத்தில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. வரும் அக்டோபர் 17 அன்று வெளியாகவுள்ள இப்படத்தைக் காண சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar