'கட்ட குஸ்தி 2' படத்தின் 50வது நாள் வெற்றி விழா: ஐசரி கே. கணேஷ் நெகிழ்ச்சி
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியான குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவைத் திரைப்படம் 'கட்ட குஸ்தி 2'. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விவி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்துள்ளது. இதனை முன்னிட்டு பிரம்மாண்ட நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், திரையரங்குகளில் நீண்ட நாட்கள் படங்கள் ஓடுவது அரிதாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் 50 நாட்களைக் கடந்து படம் ஓடியுள்ளது பார்வையாளர்களின் உண்மையான அன்பைக் காட்டுகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் ஊடகங்களுக்கும், படத்தின் கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்துகொண்டார். செல்லா அய்யாவு இயக்கத்தில் சீன் ரோல்டன் இசையமைப்பில் வெளியான இப்படம் கணவன்-மனைவி இடையேயான நகைச்சுவை மற்றும் பாசப் பின்னணியில் உருவாகி அனைத்து குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
· VelsFilmIntl