கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கு 'செங்குளம்' எனப் பெயர் சூட்டல்: யுவன் சங்கர் ராஜா இசை!
கண்ணன் ரவி குரூப் தயாரிப்பில் நடிகர் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 'செங்குளம்' (Sengulam) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா ஆய்வாளர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு கதை உண்டு, ஒவ்வொரு கதைக்கும் ஒரு பெயர் உண்டு என்ற அதிரடி வாசகத்துடன் இந்த டைட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசை இளவரசர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மண் சார்ந்த அழுத்தமான கதையமைப்புடன் கூடிய கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக இது உருவாக உள்ளது. கௌதம் கார்த்திக் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் 2027 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் கூடுதல் நடிகர், நடிகையர் மற்றும் படப்பிடிப்பு விவரங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
· Actor Kayal Devaraj