33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன்: ரீ-ரிலீஸ் தேதியை அறிவித்த கே.டி.குஞ்சுமோன்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜென்டில்மேன் திரைப்படம், சுமார் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அதிகாரப்பூர்வ ரீ-ரிலீஸ் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான பாடல்களும், ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கமும், அர்ஜுனின் அதிரடி ஆக்ஷனும் இப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத காவியமாக மாற்றின. தற்போது நவீன தொழில்நுட்ப மெருகூட்டலுடன் இத்திரைப்படம் மீண்டும் பெரிய திரைக்கு வரவுள்ளது பழைய தலைமுறை மற்றும் இன்றைய இளைய தலைமுறை இருவரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது. வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி ஜென்டில்மேன் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பெரிய திரையில் ரஹ்மானின் பாடல்களையும், அர்ஜுனின் சண்டைக் காட்சிகளையும் மீண்டும் ரசிக்க சினிமா ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.
· MalayalamReview