வட அமெரிக்காவில் 2 நாட்களில் $2 மில்லியனை கடந்த கோட்: பாக்ஸ் ஆபிஸில் விஜய் வேட்டை
தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (கோட்) திரைப்படம் வட அமெரிக்காவில் தனது அசுர வசூல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. வெளியான இரண்டாவது நாளின் முடிவில் வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. இப்படத்தை வட அமெரிக்காவில் வெளியிட்டுள்ள ஹம்சினி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், சனிக்கிழமை வார இறுதி காட்சிகளுக்கான முன்பதிவு அபாரமாக உள்ளதாகவும், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய எண்கள் பதிவாகி வருவதாகவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யின் துடிப்பான நடிப்பும், சண்டைக் காட்சிகளும் வெளிநாட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. ஏஎம்சி மற்றும் சினிமார்க் திரையரங்குகளில் தொடர்ந்து காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதால் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Hamsinient