இளையதளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா: கோட் படத்தின் நான்காவது பாடல் ஆகஸ்ட் 31 அன்று ரிலீஸ்!

இளையதளபதியுடன் பார்ட்டி பண்ண ரெடியா: கோட் படத்தின் நான்காவது பாடல் ஆகஸ்ட் 31 அன்று ரிலீஸ்!

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தின் நான்காவது பாடல் வரும் ஆகஸ்ட் 31 அன்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இளையதளபதியுடன் பார்ட்டி செய்ய தயாரா என்கிற தலைப்புடன் வெளியான இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலில் இளைய வயது தோற்றத்தில் வரும் விஜய் துள்ளலாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான விசில் போடு, சின்ன சின்ன கண்கள் மற்றும் ஸ்பார்க் ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த பார்ட்டி பாடல் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. நடனத்தில் விஜய் காட்டும் மேஜிக்கை காண அனைவரும் காத்திருக்கின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5 அன்று படம் திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில், இந்த பாடல் வெளியீடு ரசிகர்களின் கொண்டாட்டத்தை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த பாடலுக்கு நடனமாடி கொண்டாடுவது உறுதி என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

· AGS Entertainment

பழைய செய்திகள்