வட அமெரிக்காவில் ஒன்றரை நாளில் 1.75 மில்லியன் டாலர் வசூல்: பாக்ஸ் ஆபிசில் சிங்கம் போல் கர்ஜிக்கும் கோட்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வட அமெரிக்க திரையரங்குகளில் அசுர வசூல் வேட்டையை நிகழ்த்தியுள்ளது. வட அமெரிக்காவில் படம் வெளியான ஒன்றரை நாட்களிலேயே 1.75 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக விநியோகஸ்தரான ஹம்சினி என்டர்டெயின்மென்ட் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 1.3 மில்லியன் டாலர்களும், கனடாவில் 445 ஆயிரம் டாலர்களும் வசூலாகி பாக்ஸ் ஆபிசில் விஜய்யின் ஆதிக்கம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யின் இருவேறு கெட்டப்புகளும், யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. சினெமார்க், ரீகல், ஏஎம்சி போன்ற திரையரங்குகளில் வார இறுதி நாட்களில் காட்சிகள் நிரம்பி வழிகின்றன. வெளிநாட்டு சந்தையில் விஜய்யின் படங்கள் தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், கோட் திரைப்படம் இந்த வார முடிவில் மாபெரும் வசூல் சாதனையை படைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
· Hamsinient