அமெரிக்காவில் தொடங்கியது கோட் முன்பதிவு: ஐமேக்ஸ் மற்றும் எக்ஸ்டி திரைகளில் விஜய் தரிசனம்

அமெரிக்காவில் தொடங்கியது கோட் முன்பதிவு: ஐமேக்ஸ் மற்றும் எக்ஸ்டி திரைகளில் விஜய் தரிசனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (கோட்) திரைப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் வெளியிடும் இப்படம் செப்டம்பர் 4 அன்று மாலை அமெரிக்கா முழுவதும் சிறப்பு பிரீமியர் காட்சிகளுடன் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், ஐமேக்ஸ், பிஎல்எஃப் மற்றும் எக்ஸ்டி போன்ற நவீன உயர்தர திரையரங்கு வடிவங்களிலும் திரையிடப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள சினிமார்க், ஏஎம்சி, ரீகல் உள்ளிட்ட அனைத்து முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் டிக்கெட் விற்பனை தீவிரமடைந்துள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றது. விஜய் இரண்டு தோற்றங்களில் மிரட்டியுள்ளதால், வெளிநாட்டு முன்பதிவில் தொடக்க நாளிலேயே பல புதிய சாதனைகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Hamsinient

பழைய செய்திகள்