குட் பேட் அக்லி படப்பிடிப்பு நிறைவு: அஜித் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி பதிவு!
அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தனக்கு இந்த வாழ்நாள் வாய்ப்பை வழங்கியதற்காக அஜித்திற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாக உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பு தளம் முழுவதும் அஜித்தின் அரவணைப்பும் ஊக்கமும் மறக்க முடியாத பயணமாக அமைந்தது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பின் கடைசி நாள் நிகழ்வை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திரையரங்குகளில் அஜித்தின் அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Nikil Murukan