இளையராஜா இசையில் புதிய படம்: கோபி பிரசன்னா மற்றும் ஹரிஷ் இணைந்தனர்!
அபராஜித் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 3' திரைப்படத்தில் புகழ்பெற்ற பப்ளிசிட்டி டிசைனர் கோபி பிரசன்னா மற்றும் சிறந்த ஆடியோகிராபர் ஹரிஷ் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் தலைசிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அடுத்தடுத்து இணைக்கப்பட்டு வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு மிக நேர்த்தியான போஸ்டர்களை வடிவமைத்து சாதனை படைத்த கோபி பிரசன்னாவின் கைவண்ணமும், காட்சிகளுக்கு உயிரூட்டும் துல்லியமான ஒலிக் கலவைக்கு பெயர் பெற்ற ஹரிஷின் இணைவும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. பாலு மகேந்திரா அவர்களின் கலைப் பாணியில் வஞ்சிநாதன் முருகேசன் இயக்கத்தில் இப்படம் கவனமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் மும்முரமாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
· Nikil Murukan