தாரகை படத்தில் கௌரி கிஷன்: தப்பியோடும் மணப்பெண்ணாக ஈர்க்கும் புதிய ப்ரோமோ!
'96' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகை கௌரி கிஷன், கதாநாயகியை மையமாகக் கொண்ட 'தாரகை' என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் 'இசை' என்ற துடிப்பான கதாபாத்திரத்தில் அவர் தோன்றுவதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நந்தா நடிப்பில் வெளியான 'ழகரம்' திரைப்படத்தை இயக்கிய க்ரிஷ், இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப்ரோமோவில், திருமணக் கோலத்தில் இருக்கும் கௌரி கிஷன் மண்டபத்திலிருந்து அதிரடியாகத் தப்பியோடும் காட்சிகளுடன் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் சுதந்திரத்தையும் வாழ்வியல் போராட்டத்தையும் பேசும் கதையாக இது உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் கௌரி கிஷனுக்கு இந்தத் 'தாரகை' திரைப்படம் ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன.
· @xpresscinema