குரு சோமசுந்தரம் நடித்த பாரிஸ் கஃபே: அக்டோபர் 9 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்

குரு சோமசுந்தரம் நடித்த பாரிஸ் கஃபே: அக்டோபர் 9 முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங்

திரையரங்குகளில் வெளியாகி சினிமா ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற பாரிஸ் கஃபே திரைப்படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மர்மங்களும் சுவாரசியங்களும் நிறைந்த புலனாய்வு பாணியில் உருவான இத்திரைப்படத்தை சராஜ் சீலன் இயக்கியுள்ளார். இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவரும் தேசிய விருது புகழ் நடிகர் குரு சோமசுந்தரம் மற்றும் நடிகை அணுமோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அமேசான் பிரைம் வீடியோ, ஆஹா தமிழ் மற்றும் சிம்ப்ளி சவுத் ஆகிய முன்னணி டிஜிட்டல் தளங்களில் இப்படம் ஒரே நாளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், தற்போது நேரடியாக வீடுகளுக்கே வருவதால் குடும்பத்தோடு கண்டு ரசிக்க காத்திருக்கும் சினிமா பிரியர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதியில் ஓடிடியில் புதிய படங்களைப் பார்க்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமையும் என்பதால் சமூக வலைதளங்களிலும் இதன் வெளியீட்டு தேதி கவனத்தை ஈர்த்து வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்