கிரிக்கெட் பின்னணியில் ஜி.வி. பிரகாஷ்: 'அன்புடன் மஹி' படத்தின் கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
இசையமைப்பாளரும் முன்னணி நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான மாளவிகா மனோஜ் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படமான 'அன்புடன் மஹி' (Anbhudan Mahi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கெட்டப்பில் ஜி.வி. பிரகாஷ் களமிறங்கியுள்ளார். முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கின்றன. ஆயிரம் கனவுகளைத் துரத்தும் ஒரு கிரிக்கெட் வீரனின் வாழ்க்கையில் காதல் எவ்வாறு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது என்பதை உணர்த்தும் அழகிய ஃபீல் குட் கதையாக இப்படம் உருவாகி வருவதாக படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
· Actor Kayal Devaraj