ஜி.வி. பிரகாஷ், கௌதம் மேனன் இணையும் '13': அக்டோபர் 31-ல் வெளியாகும் முக்கிய அப்டேட்!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் '13'. இயக்குநர் விவேக் இயக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட முக்கிய அப்டேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 'நன்மைக்கும் தீமைக்கும் எப்போதும் ஒரு முகம் உண்டு' என்ற தலைப்புடன், இப்படத்தில் இடம்பெறும் நல்லவர் மற்றும் தீயவரின் முகங்கள் வரும் அக்டோபர் 31 அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் பவ்யா த்ரிகா மற்றும் ஆத்யா பிரசாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். கௌதம் மேனனும் ஜி.வி. பிரகாஷும் திரையில் நேருக்கு நேர் மோதும் காட்சிகளைக் காண ரசிகர்கள் இப்போதே மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Only Kollywood