ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனனின் 13: நன்மை தீமையின் முகங்கள் அக்டோபர் 31ல் வெளியாகிறது!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் 13 திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நன்மை மற்றும் தீமையைப் பிரதிபலிக்கும் முதன்மை கதாபாத்திரங்களின் தோற்றங்கள் அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. மதராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் தீவிரமான கிரைம் த்ரில்லர் பாணியில் தயாராகி வருகிறது. இதில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மையுடன் மோதிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஜிவி பிரகாஷின் அண்மைக்கால கதைத் தேர்வுகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் சூழலில், இந்த கூட்டணி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வரும் அக்டோபர் 31 அன்று மாலை வெளியாகும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் கதைக்களம் பற்றிய புதிய பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரில்லர் பட விரும்பிகளுக்கு இந்த அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.
· Idiamondbabu