ஜி.வி. பிரகாஷ் மற்றும் 'ஜோ' பட இயக்குநர் இணையும் காதல் படம்: இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரம்
'ஜோ' திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை வென்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் காட்சிகள் மிக எழிலாகவும் அழகிய உணர்ச்சிகளுடனும் படமாக்கப்பட்டு வருகின்றன. ஜி.வி. பிரகாஷின் திரைப்பயணத்தில் இது ஒரு மென்மையான மற்றும் இதயத்தை வருடும் காதல் கதையாக அமையும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்களைக் கவரும் சுவாரசியமான திருப்பங்களுடன் தயாராகும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷின் துடிப்பான நடிப்பும் தேனி ஈஸ்வரின் வசீகரமான ஒளிப்பதிவும் இணைந்து ரசிகர்களுக்கு சிறந்த காதல் அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Only Kollywood