ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியின் 'ராமாயணா' படத்தில் இணைந்த ஜி.வி. பிரகாஷ்: சுவாரசியமான தகவல் இதோ!
இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்துள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் தளம் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளது. ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், கேஜிஎஃப் புகழ் யஷ் ராவணனாகவும் நடிக்கும் இந்த மெகா பட்ஜெட் இந்திய இதிகாச திரைப்படத்தில் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட திட்டத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரும் முக்கியமான பங்களிப்பை வழங்கி வருவது தமிழ் ரசிகர்களுக்கு கூடுதல் பெருமிதத்தை அளித்துள்ளது. இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான இசை மற்றும் வசனத் தழுவல்களில் ஜி.வி. பிரகாஷ் முக்கிய பங்காற்றுவதாகவும், பிரபல தயாரிப்புக் குழுவுடன் இணைந்து அவர் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
· @xpresscinema