ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட 'ஹை' பட பாடல்: 'சூப்பர் 5' லிரிக்கல் வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பு!
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இளைஞர்களின் வாழ்க்கையைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஹை' (HIGH) திரைப்படத்தின் துள்ளலான 'சூப்பர் 5' பாடலை தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளரின் இந்த ஆதரவிற்கு படக்குழுவினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். வெளியாகியுள்ள 'சூப்பர் 5' பாடல் இளைஞர்களைக் கவரும் வகையில் அதிவேக துடிப்புடன் கூடிய பீட்களையும் எனர்ஜியான இசைக் கோர்ப்புகளையும் கொண்டுள்ளது. நவீன இளைஞர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இப்பாடல் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வேகமாகப் பரவி வருகிறது. இத்திரைப்படம் வரும் நவம்பர் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜி.வி. பிரகாஷ் போன்ற ஒரு முன்னணி திரை ஆளுமை இப்பாடலை வெளியிட்டு சிறப்பித்திருப்பது, படத்தின் மீதான கவனத்தையும் இளைஞர்களின் எதிர்பார்ப்பையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
· Ursvamsishekar