தியாகராஜன் குமாரராஜாவின் 'பாக்கெட் நாவல்': இசையமைப்பாளராக இணையும் ஜி.வி.பிரகாஷ்!
ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் அடுத்த படைப்பு பாக்கெட் நாவல் (Pocket Novel). இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவின் செய்தித் தொடர்பாளர் டயமண்ட் பாபு எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், கன்னட இயக்குனர் ராஜ் பி ஷெட்டி மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சண்டைப்பயிற்சி இயக்குனர் திலீப் சுப்பராயன், பாடலாசிரியர் யுகபாரதி என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் கைக்கோர்த்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜாவின் தனித்துவமான சினிமா பாணியுடன் ஜி.வி.பிரகாஷின் இசை இணையவுள்ளது சினிரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. தரமான சினிமாக்களை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த கூட்டணி மிகப்பெரிய சினிமா விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
· Idiamondbabu