வெளியானது 'ஹைக்கூ' படத்தின் முதல் பாடல்: அக்டோபர் 23 அன்று திரைக்கு வரும் ஃபீல் குட் மூவி!

வெளியானது 'ஹைக்கூ' படத்தின் முதல் பாடல்: அக்டோபர் 23 அன்று திரைக்கு வரும் ஃபீல் குட் மூவி!

நடிகர் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'கருவிழி' தற்போது வெளியாகி இணையத்தில் இசைப் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இப்படத்திற்கு இதமான இசையமைத்துள்ளார். பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த ஃபீல் குட் காதல் படைப்பின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி பெற்றுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மெல்லிசையாக உருவாகியுள்ள 'கருவிழி' பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சூழலில், அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் படம் ரிலீஸாகவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்