இளசுகளின் மனதைக் கவர்ந்த 'ஹைக்கூ': திரையரங்குகளில் வரவேற்பைப் பெறும் காதல் கதை!

இளசுகளின் மனதைக் கவர்ந்த 'ஹைக்கூ': திரையரங்குகளில் வரவேற்பைப் பெறும் காதல் கதை!

ஏகன், ஃபெமினா ஜார்ஜ் நடிப்பில் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையின் காதலை மென்மையான உணர்வுகளுடன் காட்சிப்படுத்தியுள்ள விதம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. சித்து குமாரின் பின்னணி இசையும் பிரியேஷின் ஒளிப்பதிவும் படத்தின் ரொமான்டிக் சூழலை நேர்த்தியாகப் பிரதிபலித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழகமெங்கும் வெளியிட்டுள்ள இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், திரையரங்குகளில் படத்திற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்