புடாபெஸ்ட் சிம்பொனி இசையுடன் மெருகேறிய 'ஹைக்கூ' பின்னணி இசை: படக்குழுவின் சிறப்பு அப்டேட்
யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி நடித்துள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் பின்னணி இசை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் ஸ்கோரிங் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களால் பிரம்மாண்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை படக்குழுவினர் சிறப்பு வீடியோவுடன் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்து இசையமைத்துள்ளார். காதலும் நெகிழ்ச்சியான குடும்பத் தருணங்களும் நிறைந்த இக்கதைக்களத்திற்கு புடாபெஸ்ட் ஆர்கெஸ்ட்ராவின் சிம்பொனி வயலின் மற்றும் மெல்லிசைக் கோர்வைகள் சர்வதேச தரத்திலான உணர்வை அளித்துள்ளதாக படக்குழு கூறியுள்ளது. தியேட்டரில் படம் பார்க்கும் போது இந்த இசை பார்வையாளர்களின் இதயங்களைத் தொடும். வரும் அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி மிக பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. மேலும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளது. இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள இத்திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
· Actor Kayal Devaraj