ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த 'ஹைக்கூ': திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு!

ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த 'ஹைக்கூ': திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு!

நடிகர் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படம், முதல் காட்சியிலிருந்தே மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இளைஞர்களின் நட்பு, காதல் மற்றும் அன்றாட வாழ்வின் உணர்ச்சிகளை மிகவும் இயல்பாகவும் நகைச்சுவை உணர்வுடனும் திரையில் கொண்டு வந்திருப்பதாகப் படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர். படத்தில் நடித்துள்ள நடிகர்களின் இயல்பான நடிப்பும் பின்னணி இசையும் கதையோடு பார்வையாளர்களை எளிதாக ஒன்ற வைக்கிறது. பார்க்கும் அனைவரையும் மனநிறைவோடு சிரிக்க வைக்கும் ஃபீல் குட் படமாக அமைந்துள்ளதால், குடும்ப ரசிகர்களும் இளைஞர்களும் 'ஹைக்கூ' படத்தைக் காண திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

· @tamilcinexpress

பழைய செய்திகள்