ஏகன் நடிக்கும் 'ஹைக்கூ' முன்வெளியீட்டு விழா: சென்னையில் முதல் பாடல் வெளியீட்டுடன் அக்டோபர் 23 ரிலீஸ்!

ஏகன் நடிக்கும் 'ஹைக்கூ' முன்வெளியீட்டு விழா: சென்னையில் முதல் பாடல் வெளியீட்டுடன் அக்டோபர் 23 ரிலீஸ்!

காதல் மற்றும் இசையைக் கொண்டாடும் புதிய படைப்பாக உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் முன்வெளியீட்டு விழா மற்றும் முதல் பாடல் வெளியீடு அக்டோபர் 10 அன்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்து இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இளைஞர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் எம்எஸ்கே சினிமாஸ் இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகின்றன. நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றியுள்ள நிலையில், 'ஹைக்கூ' திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அழகான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்