அக்டோபர் 23 அன்று திரைக்கு வரும் 'ஹைக்கூ': சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடும் புதிய படம்!

அக்டோபர் 23 அன்று திரைக்கு வரும் 'ஹைக்கூ': சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடும் புதிய படம்!

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களின் படைப்புகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். யுவராஜ் சின்னசுவாமி எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஏகன் நாயகனாக நடிக்க, ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல்களும் காட்சிகளும் இளசுகளைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய டிஜிட்டல் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அக்டோபர் 23 அன்று தியேட்டர்களில் களம் காணும் ஹைக்கூ திரைப்படம் ரசிகர்களைக் கவருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்