புக்மைஷோவில் 9.2 மதிப்பீடு பெற்ற ஹைகூ திரைப்படம்: ரசிகர்கள் ஆதரவுடன் சாதனை

புக்மைஷோவில் 9.2 மதிப்பீடு பெற்ற ஹைகூ திரைப்படம்: ரசிகர்கள் ஆதரவுடன் சாதனை

திரையரங்குகளில் திரையிடப்பட்டு வரும் ஹைகூ திரைப்படம் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று புக்மைஷோ தளத்தில் 9.2 என்ற சிறப்பான பொது மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை படக்குழுவினர் புதிய போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர். யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் மற்றும் ஃபெமினா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், உண்மையான அன்பையும் பரஸ்பர புரிதலையும் மிக அழகாகப் பேசியுள்ளது. படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்த பொதுமக்கள் தங்களின் நேர்மறையான கருத்துக்களை இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். பார்வையாளர்களின் இந்த அபரிமிதமான ஆதரவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. ஒரு எளிய காதல் திரைப்படமாக உருவாகி ரசிகர்களின் வாய்மொழி பாராட்டு மூலம் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுடன் வரவேற்பைப் பெற்று வருவது படக்குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்