ஹைக்கூ பட இசையமைப்பாளர் சித்து குமாருக்குப் பிறந்தநாள் வாழ்த்து: அக்டோபர் 23 ரிலீஸ்
இளம் இசையமைப்பாளர் சித்து குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஹைக்கூ' படக்குழுவினர் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். யுவராஜ் சின்னசுவாமி இயக்கத்தில் ஏகன் மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள ரொமாண்டிக் படமான ஹைக்கூவிற்கு சித்து குமார் மெல்லிசைப் பாடல்களை அமைத்துள்ளார். உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு தனது இசையால் அழகூட்டியுள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியீடாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
· Actor Kayal Devaraj