ரசிகர்களின் பேராதரவுடன் 2-வது வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்தது 'ஹைக்கூ' திரைப்படம்!

ரசிகர்களின் பேராதரவுடன் 2-வது வாரத்தில் வெற்றிகரமாக நுழைந்தது 'ஹைக்கூ' திரைப்படம்!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் புதுமுக நடிகர் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் நடிப்பில் வெளியான 'ஹைக்கூ' திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளுடன் 2-வது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தை தமிழகத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் எம்எஸ்கே சினிமாஸ் நிறுவனம் இணைந்து திரையரங்குகளில் வெளியிட்டன. சுவாரசியமான கதைக்களமும் இளம் நட்சத்திரங்களின் எதார்த்தமான நடிப்பும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுத் தந்துள்ளது. கல்லூரி மற்றும் இளைஞர்களின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்துள்ள விதம் பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் திரையரங்கு காட்சி எண்ணிக்கைகளும் வார இறுதி நாட்களில் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இத்திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் சாதிக்க முடியும் என்பதை ஹைக்கூ திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்