சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் 'ஹைக்கூ' படக்குழுவின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்!

சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் 'ஹைக்கூ' படக்குழுவின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்!

சென்னையின் பிரபல பிவிஆர் சத்யம் திரையரங்கில், திரையரங்கிற்கு வருகை தந்த ரசிகர்களுடன் 'ஹைக்கூ' திரைப்பட படக்குழுவினர் நேரில் சந்தித்து அன்பைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். படம் பார்த்த பார்வையாளர்கள் குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளித்து பூங்கொத்து கொடுத்தும், பாராட்டியும் வாழ்த்திய நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் முதன்மை வேடங்களில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது. மனித உறவுகளையும் காதலையும் அழகாகப் பேசியுள்ள விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களின் ஏகோபித்த நேர்மறையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கும் 'ஹைக்கூ' திரைப்படம், தியேட்டர் ரன் முடிந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தரும் இந்த மகத்தான ஆதரவு இளம் படைப்பாளிகளுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது.

· Idiamondbabu

பழைய செய்திகள்