திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் 'ஹைகூ': ரசிகர்களின் ஆதரவுக்கு படக்குழு நெகிழ்ச்சி நன்றி!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் 'ஹைகூ': ரசிகர்களின் ஆதரவுக்கு படக்குழு நெகிழ்ச்சி நன்றி!

ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'ஹைகூ' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. புதுமையான கதைக்களத்துடன் வந்துள்ள இப்படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்புக்கு படக்குழுவினர் தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்து மனதை வருடும் அருமையான இசையை வழங்கியுள்ளார். இன்றைய காலகட்டத்து இளைஞர்களின் வாழ்க்கையையும் மனித மனங்களின் நுட்பமான எமோஷன்களையும் யதார்த்தமாகப் பதிவு செய்துள்ள இத்திரைப்படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளது. தியேட்டர்களில் இளைஞர்களும் குடும்பங்களும் கூட்டம் கூட்டமாக டிக்கெட் முன்பதிவு செய்து படத்தை ரசித்து வருகின்றனர். நல்ல திரைப்படங்களை மக்கள் எப்போதுமே கைவிடுவதில்லை என்பதற்கு இப்படம் சான்றாகியுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அதே வேளையில், இப்படத்தின் போஸ்ட் தியேட்ரிக்கல் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்