திரையரங்குகளில் வெளியாகும் 'ஹைக்கூ': ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் சலுகையுடன் முன்பதிவு தொடக்கம்!

திரையரங்குகளில் வெளியாகும் 'ஹைக்கூ': ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் சலுகையுடன் முன்பதிவு தொடக்கம்!

ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹைக்கூ' திரைப்படம் அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்களுக்காக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இதயத்தை வருடும் உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சக்தி பிலிம் பேக்டரி தமிழகமெங்கும் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இதன் பாடல்களும் முன்னோட்டக் காட்சிகளும் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த சிறப்பு கட்டண சலுகை மூலம் முதல் வார இறுதி நாட்களில் குடும்பங்கள் அதிகளவில் திரையரங்குகளுக்கு வருகை தருவார்கள் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

· Only Kollywood

பழைய செய்திகள்