1 மில்லியன் இதயங்களை வென்ற 'ஹைக்கூ' டிரெய்லர்: அக்டோபர் 23-ல் உலகளாவிய ரிலீஸ்!
நடிகர் ஏகன், ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று 1 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களை எட்டியுள்ளது. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். டிரெய்லரில் இடம்பெற்றுள்ள உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் அழகான காதல் தருணங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. ரசிகர்களின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, 'ஹைக்கூ' திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
· Actor Kayal Devaraj