ஏகன் நடித்துள்ள ஹைக்கூ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு: அக்டோபர் 23 திரைக்கு வருகிறது!

ஏகன் நடித்துள்ள ஹைக்கூ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு: அக்டோபர் 23 திரைக்கு வருகிறது!

யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹைக்கூ' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சுவாரசியமான காட்சிகளுடனும் விறுவிறுப்பான எடிட்டிங்குடனும் இந்த ட்ரெய்லர் வெளிவந்து சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இளமை ததும்பும் காதல் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது என்பதை ட்ரெய்லர் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. சித்து குமார் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதாகத் தெரிகிறது. அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஹைக்கூ திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. வித்தியாசமான கதைக்களங்களை விரும்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· @_movietamil

பழைய செய்திகள்